ராய் லட்சுமிக்கு பெயர் மாற்றியும் மார்க்கெட் ஒன்றும் பிக்கப்பாகவில்லை. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜுலி 2 இந்தி படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.
இந்நிலையில் படம் குறித்து ராய் லட்சுமி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,நடிக்க வேண்டும் என்பதற்காக படங்களை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜூலி 2 இந்தி படத்தில் பிசியாக இருந்துவிட்டேன்.ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டேன்.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன்.ஜூலி 2 படத்திற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எடையை 11 கிலோ குறைத்தேன், அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன்.இதனால் அடுத்த விக்ரம் இவர் தான் என்று நாமாவது மகுடம் சூட்டுவோம்.