திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற கொஞ்சமும் தயங்க மாட்டேன் என்று கூறி ஸ்ருதி ஹாஸன் அனைவரையும் அதிர வைத்துள்ளார். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார் உலக நாயகனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸன். அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று வைராக்கியமாய் இருப்பவர் ஸ்ருதி. இந்நிலையில் ஸ்ருதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஸ்ருதியும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாரீஸ் சென்ற ஸ்ருதி மைக்கேலை சந்தித்துள்ளார். ஸ்ருதியும், மைக்கேலும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஸ்ருதியிடம் கேட்டதற்கு, திருமணம் பற்றி தற்போது நினைப்பு இல்லை என்றார். சரியான நேரம் என்று தோன்றும்போது திருமணம் செய்து கொள்வேன்.
எனக்கேற்ற நபரை சந்தித்தால் திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெறுவதில் தயக்கம் இல்லை. மீடியா மற்றும் மக்களை நினைத்து எனக்கு கவலை எதுவும் இல்லை என்று ஸ்ருதி ஹாஸன் மனதில் பட்டதை வெளிபடையாக துணிச்சலாக கூறியுள்ளார்.