நஸ்ரியா நஸீம் கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில் பரபரப்பு பேச்சாகக் கிடக்கிறது. நடிக்க வந்த வேகத்தில் நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணு என்று உடனடியாக பெயர் வாங்கியவர் நஸ்ரியா. அதே வேகத்தில் மலையாள நடிகர் பஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா எந்த படத்திலும் நடிக்கவில்லை
நஸ்ரியா தனது கணவருடன் கொச்சியில் உள்ள பிரபல மகப்பேறு மருத்துவமனைக்கு இரண்டு முறை சென்று வந்துள்ளார்.
பஹத் மற்றும் நஸ்ரியாவின் குடும்பத்தார் கடந்த வாரம் அவர்களை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்துள்ளனர். பஹத் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் கடைசி நிமிடத்தில் ரத்து செய்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிக்க வருவார் என்று பஹத் அவ்வப்போது பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்து வந்தார். இந்நிலையில் நஸ்ரியா கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.