டாப்ஸிக்கும் ஜுட்வா 2 படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே எதோ தொடர்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ஜாக்குலின் கொளுத்திப் போடுகிறாராம். டேவிட் தவான் இயக்கத்தில் அவரது மகன் வருண் தவான் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தி படம் தான் ஜுட்வா 2. சல்மான் கான் நடித்த முதல் ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம் தான்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சஜித் நாதியாத்வாலாவுக்கும், டாப்ஸிக்கும் இடையே தொடர்பு கள்ளத்தனமாக ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் படத்தில் தன்னை விட டாப்ஸிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஜாக்குலின் எல்லாரிடமும் தெரிவித்து வருகிறாராம். இரண்டு ஹீரோயின்களின் ஈகோ சண்டையால் இயக்குனரும், ஹீரோவும் தான் தலையை பிய்த்துக் கொள்கிறார்களாம்.