
விவேகம் படம் ரிலீஸாக உள்ள நிலையில் தலை அஜீத் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து முடித்துள்ளார் தலை அஜீத். படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு அம்சமாக வந்துள்ளதாக சிவா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அஜீத் இன்று காலை புகழ் பெரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அங்கு நடந்த சுப்ரபாத சேவையில் அவர் ஆர்வமாக கலந்து கொண்டார்.காலையிலேயே அஜீத்தை கோவிலில் பார்த்த அவரது ரசிகர்கள் பரும் மகிழ்ச்சி அடைந்தனர். அஜீத் ரசிகர்களின் உணர்ச்சிகளை மதித்து அவர்களுடன் அன்பாக கைகுலுக்கினார். சிலர் அஜீத்துடன் செல்ஃபியும் படம் பிடித்து எடுத்துக் கொண்டனர்.
ஒரு படத்தை துவங்கும்போதும், ரிலீஸுக்கு முன்பும் அஜீத் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வது அவரது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.