2.0 பட நாயகி ஏமி ஜாக்சன் புதிதாக துண்டை மட்டும் கட்டிக் கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கி முடித்துள்ள பிரமாண்டமான 2.0 படத்தின் நாயகி ஏமி ஜாக்சன். பீட்டா அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஷங்கரை மிகவும் டென்ஷனாக்கி வருகிறார்.
அது பத்தாது என்று சமூக வலைதளங்களில் அரை நிர்வாண டவல் கட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் உசுப்பி ஏமி. தற்போது துண்டை கட்டிக் கொண்டு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் திடுக்கென்று வெளியிட்டுள்ளார் ஏமி. அதை பார்த்து பலரும் புகழ்ந்தும் அதிர்ந்தும் வருகிறார்கள்.
ரஜினி காலா படத்தில் நடித்து வருவதால் அனைவரும் அது பற்றியே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2.0 படத்தை ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்துவிட்ட டென்ஷனில் உள்ளார் இயக்குனர் ஷங்கர். ஏற்கனவே காலா டென்ஷனில் இருக்கும் ஷங்கருக்கு சமூக வலைதளங்களில் ஏமி அவ்வப்போது வெளியிடும் இத்தகைய கவர்ச்சி புகைப்படங்களால் மேலும் டென்ஷன்தானாம்.