ஓவியா ஜெயிக்கட்டும், ஜெயிக்காம போகட்டும். ஆனால் அவர் நம் அனைவரின் இதயங்களை வென்றுவிட்டார் என்று நகைச்சுவை நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் எல்லாம் ஒரு நிகழ்ச்சியா என்று கழுவி ஊத்துபவர்கள் கூட அதை தவறாமல் உட்கார்ந்து பார்த்து வருகிறார்கள்.
இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் வேறு. நகைச்சுவை நடிகர் சதீஷும் பிக் பாஸின் பெரிய ரசிகனாகிவிட்டார். அவருக்கு பிடித்த போட்டியாளர் வேறு யாரும் இல்லை நம்ம ஓவியா தான். ஓவியாயாயாயாயாயா...
ஐ லவ் யூ மாாாாாாாாாாாாா மாஸ் நீ மாஸ். உங்களை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சதீஷ். ஓவியா ஜெயிக்கட்டும், ஜெயிக்காம போகட்டும். ஆனால் அவர் நம் இதயங்களை வென்றுவிட்டார்....நமீதா நாளைக்கு வெளிய போகும்போது ஜூலிய தயவு செய்து கூட்டிட்டு போயிடுமா என்றார் சதீஷ்.