தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. சில படப்பிடிப்புகளில் படத்தளத்தில் பெப்சி தொழிலளார்கள் அதிக சம்பளம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தினார்கள் என்று பரவலாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள், இனி யாரை வைத்து வேண்டுமானாலும் அந்த வேலை செய்து கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
இந்த திடீர் அறிவிப்பு பெப்சி தொழிலாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியததோடு பெப்சி கண்டனம்
தெரிவித்தது. மேலும் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு பதிலாக நடிகர்களின் சம்பளத்தை கணிசமாக குறைத்தாலே தயாரிப்பாளர்களுக்கு 50 சதவீதம் செலவு குறையும் என்று பெப்சி சங்கத் தலைவர் ஆர்கே செல்வமணி கூறியிருந்தார்.
தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் சினிமா தலைத்து ஓங்கும். யார் வயிற்றிலும் அடிப்பது எங்கள் எண்ணம் இல்லை, இருந்தாலும் தயாரிப்பாளர்கள் நலனையும் கருத வேண்டும். இப்போதைக்கு பெப்சியுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்" என்றார்