தெலுங்குத் திரையுலகமே கதிகலங்கி ஸ்தம்பித்து போயிருக்கிறது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தெலுங்கானா மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு பிரபல தெலுங்குத் திரையுலகினரை தகாத போதைப் பொருள் பயன்படுத்துதல் விவகாரத்தில் விசாரித்து வருகிறது.
இயக்குனர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு, நடிகர்கள்
தருண்குமார், சுப்பராஜ், நவ்தீப், நடிகை சார்மி ஆகியோரை இதுவரை விசாரணைக்கு அழைத்தனர். அவர்களிடமிருந்து அவர்கள் ரத்த மாதிரி, நகம் உள்ளிட்டவைகள் விசாரணைக்காக பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இன்று பிரபல நடிகை முமைத் கான் விசாரணைக் குழு முன் ஆஜர் ஆகியுள்ளார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து இதற்காக
அனுமதி பெற்று அவர் வந்துள்ளார். திரும்பவும் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் திரும்பி போவாரா என்பது விசாரணை முடிந்த பிறகே தெரியும்.
தெலுங்கானா அரசாங்கம் வேண்டுமென்றே ஆந்திரத் திரையுலகினர் நல்ல பெயரைக் கெடுக்கும் விதத்தில் நடந்து கொள்கிறது என்றும் சிலர் வதந்தி கிளப்புகிறார்களாம். விசாரணை முடிவில் தான் இந்த விவகாரம் எந்த ரூட்டில் போகும் என்று தெரிய வரும். அதுவரை இப்படியான சர்ச்சைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது என்றே டோலிவுட்டில் பலர் கருதுகிறார்கள்.