
ரஜினிக்காக மரம் மாதிரி சப்பையாக படத்தில் நிற்கச் சொன்னால் கூட சந்தோஷப்படுவேன் என்று நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி.
காலா படத்தில் நடிப்பது குறித்து சில விஷயங்களை அவர் பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.ரஜினி சாருடன் பணியாற்றுவது மிக அருமையான அனுபவம். அவர் நடந்தால் அனைவரும் அமைதியாக அவருக்கு ஓரம் ஒதுங்கி வழிவிடுவார்கள். அவரது தாழ்மையும் எளிமையும் தான் என்னை வியக்க வைக்கிறது.
ரஜினி அருகில் மரம் போன்று என்னை சப்பையாக நிற்க வைத்தாலும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் நல்ல வேளை ரஞ்சித் எனக்கு பெரிய ரோல் கொடுத்துள்ளார். காலா எனக்கு மிக ஸ்பெஷலான படம். காரணம் இது ரஜினி சார் படம் என்றார்.