ஆட்டோமேஷன், குறைந்த அளவிலான வளர்ச்சி, புதிய தொழில்நுட்ப சேவைக்கு மாற்றம் எனப் பல்வேறு காரணங்களால் பாதிப்புகளைச் சந்தித்து வரும் இந்திய ஐடி நிறுவனங்கள், முதலீட்டாளர்களையும் பங்குதாரர்களையும் மகிழ்ழ்விக்க நிறுவனத்தின் செலவை குறைக்க நிறைய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்தது. இதனால் பல பெரிய ஊழியர்களை பணியை இழந்து தவித்தனர்.இப்போது அனைத்து ஐடி ஊழியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.
சிடிஎஸ் நிறுவனத்தைப் போலவே ஆக்சென்சர் என்ற பெரிய நிறுவனம் இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களை இந்தியாவில் வைத்து தனது பெரிய வர்த்தகத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வருடம் மட்டும் சுமார் 5,396 ஊழியர்களை இந்தியாவில் வேலை வாய்ப்பு கொடுக்க. இது அமெரிக்கா விட 4 மடங்கும், போலாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற மற்ற நாடுகளை விட 12 மடங்கு அதிக வேலைவாய்ப்புகளாகும்
உலகளாவிய மொத்த வேலைவாய்ப்புகளில் 55 சதவீதம் இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.