சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா ஆகிய முன்னனி நடிகர் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான படம் 'திருட்டு பயலே'. கதையின் காணிசமான கருப்பொருளினால் சர்ச்சையை உண்டாக்கிய அதேநேரத்தில் காசுரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகம் வரும் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சுசி கணேசன் கூறும்போது, 'இன்றைய சூழலில் தீவிரவாதத்தால் உயிரழப்பவர்களை விட இந்த கள்ளக்காதலில் உயிரிழப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அந்தளவுக்கு தினம் ஒரு கொலை என்ற கணக்கில் இதனால் நடக்கிறது. அதன் எதிரொலி இந்தப் படத்திலும் கண்டிப்பாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.
'அமலாபால் இந்தப் படத்துக்கு ஒரு முக்கியமான பாத்திரமாக இருப்பார். அவரது போஸ்டர் இண்டர்நெடில் போட்டவுடனேயே இணையதளத்தில் படுவேகமாக ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். அந்தளவுக்கு அவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி இருக்கிறது' எனக் கூறியிருக்கிறார்