சர்ச்சைக்குரிய டிவி சீரியலை ஒளிபரப்புவதை
பிரபல சோனி நிறுவனம் திடீர் என்று நிறுத்தியுள்ளது.சோனி தொலைக்காட்சி சேனலில்
தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் பெஹ்ரிதார் பியா கி. கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பான இந்த சீரியல் பெரிய சர்ச்சையில் சிக்கியது.

சீரியலின் மூலக் கதையால் அதற்கு எதிராக பலர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் புகார் தெரிவித்தனர்.

9 வயது சிறுவனுக்கும், 18 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையை மையமாக காட்டி வந்தனர். 9 வயது அஃபான் கான் கணவராகவும், தேஜஸ் பிரகாஷ் 18 வயது மனைவியாகவும் அதில் நடித்தனர். எதிர்ப்பு வலுத்ததை அடுத்து சோனி சேனல் பெஹ்ரிதார் பியா கி சீரியலை 28ம் தேதி முதல் நிறுத்திவிட்டது. சீரியலை நிறுத்திவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது