
கடந்த 2009-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி செம ஹிட் அடித்த படம் 'கிக்'. இந்தப் படம் நம்ம தமிழிலும் தில்லாலங்கடி எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டுநடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது.

இந்தப் படம் பாலிவுட்டிலும் வேறு பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 'கிக்' படம் பாலிவுட்டில் சல்மான் கான் - ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோரின் இணைந்த நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.

ஷாருக்கானின் 'ஹேப்பி நியூ இயர்' படத்தை வசூலில் வேகமாய் பின்னுக்குத் தள்ளிய இந்தப் படத்தின் புதிய இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. பிகா படுகோனே இந்தப் படத்தில் நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட எல்லா விதத்திலும் உறுதியாகி இருக்கிறது. சல்மான் கானும் தீபிகா படுகோனேவும் முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் ஜோடியாய் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.