காலா படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தில் இருப்பதால் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த மாதத்தில்
ரஜினி தன் ரசிகர்களை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து
திட்டவட்டமாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல கபாலி பட இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மும்பை தாதாவாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தின் படப்பிடிப்பு
கடைசி பாகமும் முடிய இருப்பதாக தெரிகிறது. மும்பையின் தாராவி பகுதியில் தொடங்கி படப்பிடிப்பு
பரபரப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தொடங்கியது முதல் மின்னல் வேகத்தில் விறுவிறுப்பாக
கடகடவென்று நடைபெற்று வருகிறது. சுமார் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிகிறது.
எஞ்சிய பகுதிகளை படமாக்க சென்னையில் பூந்தமல்லி பகுதியில் தாராவி போன்ற செட் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு எஞ்சிய காட்சிப் படப்பிடிப்பிற்காக படக்குழு மீண்டும் மும்பை நோக்கி செல்ல உள்ளது.
அதன்பின் ரசிகர்களுடனான இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரேவசம் குறித்த
திட்டவட்டமான தெளிவான நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று தெரிகிறது. கடந்த முறை
நடந்த ரசிகர்களுடனான சந்திப்பின் போது போருக்கு தயாராகுங்கள் நேரம் வரும் போது அரசியல் பற்றி அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.