வாமனன், காஞ்சனா, மங்காத்தா ,அரண்மனை என பல படங்களில் தனது கவர்ச்சியால் கவனம் ஈர்த்தவர் லட்சுமி ராய். சமீப காலமாக வாய்ப்புகள் எதுவும் பெரிதாக இல்லாத நிலையில் ஐட்டம் பாடல்களில் கவர்ச்சி நடனம் ஆடி வந்தார். பவன் கல்யாணின் சர்தார் கப்பார் சிங், சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150, லாரன்ஸின் மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற பல படங்களில் தனது வாளிப்பான இடையழகால் கவர்ந்தவர், சென்ற ஆண்டு பாலிவுட்டில் கதாநாயகியாக கால் பதித்தார்.

ஜூலி 2 என்ற அந்த திரைப்படத்திற்காக கணிசமாக எடையை குறைத்த லட்சுமி ராய், அதிரடியாக களமிறங்கி ஜூலி 2 வில் டூ பீஸ் பிகினி உடையில் தோன்றினார். இது மட்டுமின்றி, படத்தில் பல நெருக்கமான காதல் காட்சிகள், லிப்லாக் காட்சிகள், மற்றும் டாப்லெஸ் காட்சிகளில் தனது மேனியழகை காட்டி நடித்தார் லட்சுமி ராய். ஆயினும் இவரது படு கிளாமர் புரட்சியையும் மீறி படம் படுதோல்வி அடைந்தது.

இதனை தொடர்ந்து இப்பொழுது மீண்டும் தமிழில் ஒரு புதிய வாய்ப்பை பிடித்திருக்கிறார் லட்சுமி ராய். எத்தன் திரைப்படத்தை இயக்கிய சுரேஷின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் நீயா 2 தான் அத்திரைப்படம். இதில் இவர் தவிர வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் கேத்ரீன் தெரேசா நடிக்கிறார்கள். மூன்று பேருமே போட்டி போட்டு கவர்ச்சி காட்டக்கூடியவர்கள் என்பதால், பிகினி பிளான் புஸ் ஆனதால் வருத்தம் அடைந்த லட்சுமி ராய், செக்சியான பாம்பாக ஹிஸ்ஸ் என்று வரவிருக்கிறார்.