குயின் ,தனு வெட்ஸ் மனு, வோ லம்ஹே, மெட்ரோ போன்ற பல படங்களில் ,தனது பண்பட்ட நடிப்பால் கவர்ந்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். நல்ல கதையம்சம் மற்றும் தனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கக்கூடிய கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கும் கங்கனா, தனது சிறப்பான நடிப்பாலும், கதை தேர்வாலும் இந்தி சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்கிறார். இந்நிலையில் கடைசியாக நடித்த சிம்ரன் படத்தை தொடர்ந்து இப்பொழுது மெண்டல் ஹை க்யா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
தேசிய விருது பெற்ற ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை, தெலுங்கில் 'அனகனக ஒக்க தீருடு' மற்றும் 'சைஸ் ஸீரோ' படங்களை இயக்கிய பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார். ஒவ்வொரு நாளும் இப்படத்தின் ஒவ்வொரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான போஸ்டரில் கங்கனா ரனாவத் பாத் டப்பில் நிர்வாணமாக அமர்ந்திருப்பது போன்ற ஒரு போஸ்டர் வெளிவந்துள்ளது. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன்னர் ராஸ்க்கல் படத்தில் டூ பீஸ் பிகினி உடையில் கவர்ச்சி காட்டியும், பேஷன் படத்தில் டாப்லெஸ் காட்சியிலும், ராஸ் 2 படத்தில் நிர்வாணமாக பாத் டேப்பை விட்டு எழுந்து ஓடும் காட்சியிலும் நடித்து பரபரப்பை கிளப்பி தன்னால் கவர்ச்சியாகவும் கலக்க முடியும் என்று நிரூபித்தவர் தான் கங்கனா எனினும், இப்படி திடீரென ஒரு பிளாப் இயக்குனரின் படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்திருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மொத்தத்தில் கங்கானாவின் கவர்ச்சி விருந்து, அவருக்கு வெற்றி தேடி தருவதோடு, அவரது தேசிய விருது நடிகை என்ற பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல் இருந்தால் சரி!