நடிகை காஜல் அகர்வால் சமீப காலமாக தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சென்ற ஆண்டு தெலுங்கில் நடித்த நேனே ராஜு நேனே மந்திரி ஆகட்டும், தல அஜீத்துடன் நடித்த விவேகம் ஆகட்டும், இரண்டிலும் கணவனே கண்கண்ட தெய்வம் என வாழும் ஒரு உதாரண மனைவியாக திரையில் வாழ்ந்திருப்பார் காஜல். இவ்வாண்டின் தொடக்கத்தில் நாணி தயாரிப்பில் வெளியான ஆவ் படத்திலும் மல்டிபுல் பெர்சனாலிட்டி டிஸார்டர் உள்ள ஒரு பெண்ணாக, இளம் பிராயத்திலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு அழகிய பெண்ணாக நடித்து பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் இவருக்கு வந்த ரவி தேஜா பட வாய்ப்பை கூட வழக்கமான மரத்தை சுற்றி டூயட் ஆடும் பாத்திரம் என மறுத்தவர், அடுத்ததாக நடிக்கவிருப்பது அதையெல்லாம் தாண்டிய ஒரு கவர்ச்சி பாத்திரத்தில். 2011இல் வெளியான "நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்ட்" ஹாலிவுட் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரிமேக்கில் அடுத்ததாக காஜல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் கதை என்னவென்றால், ஆண் மற்றும் பெண் நண்பர்கள் இருவர், எந்த வித கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு உடலுறவு சார்ந்த உறவில் இருந்து பின்னர் காதல் வயப்படுவதே ஆகும்.
சமீப காலமாக காஜல் விழாக்களுக்கு அணிந்து வரும் அனைத்து உடைகளும் அவரது எடுப்பான முன்னழகை காட்டும் வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில், பல செக்ஸ் காட்சிகளும் அரை நிர்வாண காட்சிகளும் கொண்ட இந்த ஆங்கில படத்தில் காஜல் நடிப்பதால், ரசிகர்கள் ஒரு கவர்ச்சி விருந்துக்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் காஜல் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தில், கண்ணாடி அணிந்து முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுத்ததை அவரது ரசிகர்கள் கண்டு அப்புகைப்படத்தில் அவர் பிரபல செக்ஸ் திரைப்பட நாயகி மியா காலிஃபா போல உள்ளதாக கூறி வருகின்றனர்.