பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய திரைப்படமான மஹாநடி, சிறப்பான முறையில் உருவாகி வருகிறது. நாணி நடித்த எவடே சுப்ரமணியம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இந்த படத்தை இயக்குர்க்கிறார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் புகைப்படங்களில் ,நடிகை கீர்த்தி சுரேஷ் அச்சு அசலாக சாவித்ரியை போலவே இருப்பதாக அனைவரும் புகழ்ந்து வியந்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் கீர்த்தி தான் சாவித்திரியாக நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வந்த போது, சமூக வலைத்தளங்களில் அனைவரும் கொந்தளித்து ,கீர்த்தியை கலாய்த்து திட்டி பதிவுகள் இட்டு வந்தனர். ஆனால் இன்றைய நிலைமையோ தலைகீழாக உள்ளது. கீர்த்தி சாவித்ரியாகவே மாறிய அதிசயத்தை கண்டு அவரை பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள், அவரது உழைப்பை வியந்த வண்ணம் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் மஹாநடி பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி, இந்த படத்தை பார்த்துவிட்டு தன்னை இதுவரை கேலி செய்து கலாய்த்தவர்கள் கூட காதலிக்க தொடங்குவார்கள் என்று கூறியிருந்தார். மே ஒன்பதாம் தேதி வெளியாகும் மஹாநடி திரைப்படம், தமிழிலும் நடிகையர் திலகம் என்ற பெயரில் வரவுள்ளது. சமந்தா, பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.