2015இல் வெளியான தனுஷின் அனேகன் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் அமைரா தஸ்தூர்.அப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. இம்ரான் ஹஷ்மியுடன் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்த அமைரா, அப்படம் மாபெரும் வெற்றி பெரும் என நினைத்தாராம். ஆனால் அப்படமோ படு தோல்வி அடைந்தது.

அதனை தொடர்ந்து ஜாக்கி சானுடன் நடித்த குங்ப்பூ யோகா படமும் படு தோல்வி அடையவே, துவண்டு போன அமைராவை அவரது பெற்றோர், தாய்லாந்து அழைத்து சென்று மகிழ்வித்து அழைத்து வந்தனராம். சமீபத்தில் இவர் சந்தீப் கிஷன் ஜோடியாக நடித்த தெலுங்கு படமான மனசுக்கு நச்சிந்தி படமும் பிளாப்.

இந்நிலையில் கடைசி படியாக இப்போது ஒரு பாலிவுட் படமும், தமிழில் சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கனும் என்ற படமும் மட்டுமே வைத்திருக்கும் அமைரா, அளவான கவர்ச்சியுடன் கலக்க எப்பொழுதும் ரெடியாகவே உள்ளார். மிஸ்டர் எக்ஸ் படத்தில் கூட டூ பீஸ் பிகினி உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்டவர் தான் அமைரா எனினும், அவருக்கு வெற்றி என்பது எட்டா கனியாகவே உள்ளது.