சென்ற ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தால் பாலிவுட்டிலிருந்து அழைத்து வரப்பட்டவர் அதிதி ராவ் ஹைதரி. காற்று வெளியிடை படத்தில் ,லீலா என்ற கதாபாத்திரத்தில், கார்த்தி ஜோடியாக நடித்த அதிதி, அதன் பின்னர் அவரது செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிறப்பால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜ வம்ச பெண்ணாகிய அதிதி, விரைவில் தனது முதல் தெலுங்கு படத்திலும் தோன்ற உள்ளார்.
![Image result for aditi rao apherald](https://data1.ibtimes.co.in/cache-img-801-361/en/full/641424/1491568656_cheliya-karthi-aditi-rao-hydari.jpg)
இந்திரகண்டி மோஹனக்ரிஷ்னா இயக்கத்தில் வெளிவரும் சம்மோஹனம் தான் அந்த திரைப்படம். மகேஷ் பாபுவின் உறவினர் சுதீர் பாபு இதில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் டீசர் இன்று மெகாஸ்டார் சிரஞ்சீவியால் வெளியிடப்பட்டது.
![Image result for aditi rao apherald](https://4.bp.blogspot.com/-NKqOfaaQaXQ/U0OaDiCAvjI/AAAAAAAAH-w/tSy2kMfASrU/s1600/Aditi+Rao+Hot+Bikini+Photoshoot+Pictures+Photos+Posters+Images+Wallpapers+Gallery+3.jpg)
அழகான காட்சியமைப்புகள், அதை விட அழகான அதிதி, நெஞ்சை கொள்ளை கொள்ளும் காதல் மற்றும் இசை என, அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தூண்டும் வண்ணம் டீசர் வந்துள்ளது. இப்படத்தில் அதிதி ஒரு நடிகையாகவே நடிக்கிறார். காற்று வெளியிடை படத்தில் டாக்டர் ஆக நடித்த அதிதி, இப்பொழுது ஆக்டராக நடித்துள்ள இப்படம், ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.