அனேகன் படத்தில் அறிமுகமான அமைரா தஸ்தூர், படங்கள் எதுவும் இல்லாமல், சந்தானம் நடிக்கும் ஓடி ஓடி உழைக்கணும் படத்தை மட்டுமே கையில் வைத்திருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ,இவருக்கு ஒரு பெரிய பம்பர் ஜாக்பாடாக ஒரு பெரிய படம் சிக்கியுள்ளது.
திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், இசையமைப்பாளர் கம் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம் தான், அமைராவின் அடுத்த படம். இப்படத்தில் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை விடவும், டபுள் மீனிங் வசனங்களும், கவர்ச்சி காட்சிகளும், தூக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விர்ஜின் மாப்பிள்ளை என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படும் இத்திரைப்படத்தில் ஏற்கனவே, சுசி லீக்ஸ் புகழ் சஞ்சிதா ஷெட்டியும், சோனியா அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. படங்களே இல்லாத நிலையில் சிக்கியிருக்கும் இந்த இளமை துள்ளலான படத்தில், அமைரா டு பீஸ் பிகினி உடையில் தோன்றுவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கவர்ச்சி ஆட்டத்தால் மீண்டும் மார்க்கெட்டை பிடிப்பாரா பாப்போம்.