நடிகை ரெஜினா கஸாண்ட்றா, சென்ற ஆண்டு வெளியான மாநகரம் படத்தை அடுத்து இப்பொழுது தான் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இடையில் தெலுங்கில் ஆவ், நக்ஷத்திரம் போன்ற படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ரெஜினா கஸாண்ட்றா, இப்பொழுது கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் நடிக்க, திரு இயக்கும் மிஸ்டர் சந்திரமவுலி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் தோன்றவுள்ளார்.

தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் படங்களை தொடர்ந்து, திரு இயக்கும் இப்படத்தில் ,ரெஜினா சில விஷயங்களை முதன்முறையாக செய்திருக்கிறார். இதுவரை தான் நடித்த படங்கள் எதற்கும் டப்பிங் பேசாத ரெஜினா ,முதன்முறையாக மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் தன் சொந்த குரலில் டப்பிங் பேசிற்றுயிருக்கிறார்.

அது மட்டுமின்றி, இப்படத்தில் வரும் ஏதேதோ ஆனேனே என்ற பாடலில், தன் திரை வாழ்க்கையிலேயே இல்லாத அளவுக்கு அதிக பட்சமாக பிகினி உடையில் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். இது வரை மிதமான கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த ரெஜினா, திரு அந்த பாடலில் அந்த அளவுக்கு கவர்ச்சி கண்டிப்பாக வேண்டும், அதனால் டூ பீஸ் நீச்சல் உடை தான் வேண்டும், என்று உறுதியாக சொன்ன ஒரே காரணத்தால் தான் அப்பாடலில் பிகினி அணிந்து நடித்தாராம். இப்பாடலில் ரெஜினா - கவுதம் கார்த்திக் இடையிலான சூடேற்றும் கெமிஸ்ட்ரி அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.