மதுரைக்கார பெண்ணான நிவேதா பெத்துராஜ் , ஒரு நாள் கூத்து படத்தின் "அடியே அழகே" பாடலின் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடித்த பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் , பக்கா கிராமத்து பெண்ணாக நடித்தார் நிவேதா.

இரண்டு படங்கள் , அதிகமான ரசிகர்கள் என இருந்தும் கூட, இன்னும் ஒரு வெற்றியை கூட தரவில்லை நிவேதா. சென்ற ஆண்டு மெண்டல் மதிலோ படத்தின் மூலமாக தெலுங்கிலும் கால் பதித்தார். இடையில் இவரது ஹாட்டான கிக் பாக்சிங் போட்டோஷூட் புகைப்படங்கள் லீக் ஆனதில், இன்னும் அதிக வரவேற்பை பெற்ற நிவேதா, சமீபத்தில் பேரதிர்ச்சிக்குள்ளானார்.

ஒரு பெண் டூ பீஸ் பிகினி அணிந்தது போன்ற படம் ஒன்று வைரலாகி, அது நிவேதா பெத்துராஜ் தான் என்று கூறப்பட்டு பரவியது. இந்நிலையில் அப்படத்தில் உள்ளது நிவேதா பெத்துராஜ் அல்ல சென்னை மாடலாகிய வர்ஷினி பகல் என்று தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து நிவேதா, தன்னை தவறாக காட்டி செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் மற்றும் வெப்சைட்டுகள் மீது வழக்கு பதியவிருப்பதாக காட்டமாக கூறியுள்ளார்.