நடிகை அமலா பால் மற்றும் அரவிந்த் ஸ்வாமி நடித்து நாளை வெளியாவதாக இருந்த படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த படமான பாஸ்கர் தி ராஸ்கல் அங்கு மம்முட்டி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டது.

இந்த படத்தை இங்கும் அங்கு எடுத்த சித்திக் தான் எடுக்கிறார். இந்நிலையில் நாளை வெளிவருவதாக இருந்த இத்திரைப்படம், பண பிரச்சனைகளால் மீண்டும் தள்ளி போட பட்டிருக்கிறது. முதலில் பொங்கல் வெளியீடு என்றனர். பின்னர் குடியரசு தினம் என்றனர். பின்னர் ஸ்ட்ரைக் முடிந்த கையேடு மார்ச் இறுதியில் என்றனர். கடைசியாக நாளை தேதி குறித்தனர்.

இத்தனை நாட்களும் இல்லாமல், பைனான்சியர் இப்பொழுது பிரச்சனை பண்ணவே படம் நாளை வெளியாவதில் சிக்கல் ஏற்படவே படத்தை அடுத்த வாரம் தள்ளி போட்டுள்ளனர். இதே போலவே, அமலா பால் நடிக்கும் மற்றொரு படமான விஷ்ணு விஷால் உடன் நடிக்கும் ராட்சசன் படமும், பல நாட்களாக வெளியாகாமல் உள்ளது. அமலா நடித்தாலே படம் வெளியாகுவதில் இதனை சிக்கல் வருமோ, என அனைவரும் நினைக்க தொடங்கி விட்டனர்.