2016ஆம் ஆண்டு வெளியான இறுதி சுற்று படத்தின் மூலமாக, தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். ப்ரொபஷனல் குத்துச்சண்டை வீராங்கனையான இவர், சுதா கொங்கரா இயக்கிய இறுதி சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடிப்பு துறைக்குள் கால் பதித்தார்.

அந்த படம் வெற்றி பெற்றாலும் கூட அடுத்ததாக பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், இவருக்கு அமைந்தது ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படம். அந்த படத்தில் ஒரு கவர்ச்சி பேயாக நடித்திருந்தார் ரித்திகா சிங். அதிலும் குறிப்பாக ரங்கு ரக்கர என்ற ஒரு குத்து பாடலில், இடையழகையும், முன்னகழகையும் காட்டும் வகையில் தாராளமாக கவர்ச்சி காட்டக்கூடிய உடையணிந்து கெட்ட ஆட்டம் போட்டிருப்பார்.

இத்தனை முயற்சி செய்தும் கூட, ரித்திகா சிங்க்கிற்கு பெரிதாக படங்கள் கிடைக்கவில்லை. இறுதி சுற்று படத்தின் தெலுங்கு பதிப்பான குரு படத்தில் சென்ற ஆண்டு நடித்தவர், இப்பொழுது ஈரம் புகழ் ஆதி ஜோடியாக ,ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தாப்ஸியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வேறு படங்கள் இல்லாத நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது ஹாட்டான உடற்பயிற்சி போட்டோக்களை அப்லாட் செய்து வருகிறார் ரித்திகா சிங்.