கட்டுடல் மேனியழகி ஷ்ரியா சரண் ,சில மாதங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களும், திரைத்துறையினரும் அதிர்ச்சி அடையும் வண்ணம் தனது பாய்ப்ரெண்ட் ஆண்ட்ரி கார்ஸசீவை ரகசிய திருமணம் செய்தி கொண்டார். இதனை தொடர்ந்து, இவர் நடிப்பதாக இருந்த சில படங்களில் இருந்தும் கூட கழட்டி விடப்பட்டார்.

தனது கைவசம் இருந்த ஒன்றிரண்டு தெலுங்கு மட்டும் ஹிந்தி படங்களை தவிர வேறெதுவும் இல்லாத நிலையில், அவரை தேடி மீண்டும் ஒரு வாய்ப்பு வந்து கதவை தட்டியுள்ளது. நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க இயக்குனர் வி. வி. விநாயக் இயக்கும் அடுத்த ஆக்ஷன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தான் அது.

இப்படத்தில் ஷ்ரியா சரண் படு கவர்ச்சியான வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஷ்ரியா சரண் பாலக்ரிஷ்ணாவுக்கு ஜோடியாக கவுதமிபுத்ரா சாதகர்ணி படத்திலும், பைசா வசூல் படத்திலும் ஜோடி போட்டு கவர்ச்சி ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.