நடிகை த்ரிஷா ,சமீபத்தில் தனது முப்பத்தி ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடினார். கடைசியாக தமிழில் அரண்மனை 2 போன்ற சில படங்களில் படு கவர்ச்சியாக தோன்றிய த்ரிஷா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ஹேய் ஜுட் படத்தில் நடித்து ,அதன் மூலம் சிறப்பான பெயர் பெற்றார்.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இந்நிலையில் அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள ஒரு அதிரடி படம் தான் குற்ற பயிற்சி. எண்பதுகளில் நடக்க கூடிய ஒரு கதைக்களத்தில் பயணிக்கும் இப்படத்தை, இயக்குனர் பாலாவின் அசிஸ்டண்டான வெர்னிக் இயக்குவுள்ளார்.

இந்த படத்தில் த்ரிஷா, ஒரு மிகவும் அறிவார்ந்த, புத்திசாலியான ஒரு பெண் டிடெக்ட்டிவ்வாக நடிக்க உள்ளார். இப்படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளும் ,சண்டை மற்றும் சேஸ் காட்சிகளும் இருக்கும் எனவும், இதற்காக த்ரிஷா தானே டூப் போடாமல் நடிப்பதாக கூறியதோடு, மட்டுமல்லாமல் எடையை கணிசமான அளவில் குறைத்து, சண்டை பயிற்சி மற்றும் கார் வேகமாக ஓட்டும் பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம். இந்த படத்தை தவிர த்ரிஷா கைவசம் கர்ஜனை , பரமபதம் விளையாட்டு, தொண்ணூற்றி ஆறு போன்ற பல படங்கள் உள்ளன.