முன்னாள் நடிகை மேனகாவின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ், ரஜினிமுருகன், ரெமோ, போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும், அப்படங்களை எல்லாம் மிஞ்சும் வண்ணம் அவருக்கு பேரும் புகழும் சம்பாதித்து தந்துள்ளது, அவரது சமீபத்தைய படமான நடிகையர் திலகம்.

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை படமான இத்திரைப்படம் தெலுங்கிலும் தமிழிலும் சிறப்பான விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படம் நான்கே நாட்களில் முப்பது கோடி வசூலை தாண்டி சிறப்பாக ஓடி வரும் நிலையில், கீர்த்திக்கு அடுத்ததாக ஒரு பெரிய வாய்ப்பு வந்துள்ளது. கீர்த்தியின் நடிப்பை தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், நேற்று தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஒரு பாராட்டு விழாவை நடத்தினார்.

இவ்விழாவில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி கூட பங்கேற்றார். மஹாநடி படத்தை முதலிலேயே பார்த்து விட்டு ,கீர்த்திக்கு முதல் வகுத்துக்களை சொன்னவர் ராஜமவுலி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது, தான் அடுத்ததாக ராமச்சரன் மற்றும் ஜுனியர் என்டிஆர் இவர்களை வைத்து எடுக்கும் பிரம்மாண்டமான படத்தில் கீர்த்தியை கதாநாயகியாக நடிக்க வைக்க யோசித்து வருகிறாராம் ராஜமவுலி. கீர்த்திக்கு அடிக்குமா இந்த லக்கி பரிசு என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.