நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியான மஹாநடி படத்திற்காக பாராட்டுகளை குவித்து வருகிறார். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படம் தமிழிலும் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை படமான மஹாநடி படத்தில், கீர்த்தியின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக ஒரு செய்தியில் கீர்த்தியின் பெயர் அடிபட்டு கொண்டிருக்கிறது.

முன்னாள் நடிகை மற்றும் தமிழக முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் உருவாகுவதாகவும், அப்படத்தில் கீர்த்தி ஜெயலலிதாவாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. மஹாநடி வெற்றியை தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து வந்த கீர்த்தியிடம் பத்திரிகையாளர்கள் ஜெயலலிதா படம் பற்றி கேட்ட போது கீர்த்தி, அந்த செய்தியில் உண்மை எதுவும் இல்லை என்றார். மேலும், மஹாநடி படத்திற்கு பிறகு வேறு வாழ்க்கை படங்களில் நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.