காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி போன்ற சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போகவே மார்க்கெட் இழந்தார் சுனைனா.
ஆயினும் சீனு ராமசாமி இயக்கிய நீர் பறவை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மீண்டும் நல்ல பெயர் பெற்ற சுனைனா அப்படத்தை தொடர்ந்து தனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தெறி படத்தில் ஒரே ஒரு காட்சியில் தோன்றும் அளவுக்கு இவரது நிலைமை ஆனது. இந்நிலையில் தான் வரவுள்ளது விஜய் ஆண்டனி நடிக்கும் காளி. இந்த படத்தை தான் சுனைனா பெரிதும் நம்பியுள்ளார். இந்த படமும் ஓடா விட்டால் திரையுலகில் இருந்தே விலகி விட முடிவு செய்துள்ளதாக தகவல்.