நடிகை அமலா பால் மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் சித்திக் இயக்க வெளியாகியுள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் ஹிட்டடித்த, மம்மூட்டி- நயன்தாரா நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக் தான் இப்படம். அங்கு எடுத்த அதே சித்திக் தான் இங்கும் எடுத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்தவர்கள் யாவரும், படம் படு மொக்கையாக இருப்பதாகவும் காமெடியே சரியாக அமையவில்லையென்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் , 'ப்ரண்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களை எடுத்தவரா இந்த படத்தை எடுத்துள்ளார்?' என்ற ரீதியிலும், 'சித்தார்த் அபிமன்யுவை இப்படி டம்மி ஆக்கி விட்டீர்களே!' என கோப விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.

திருட்டு பயலே படத்தில் தனது கட்டுடல் மேனியழகால் ,கவர்ச்சியால் ரசிகர்களை ஈர்த்த அமலா பால், தான் பெரிதும் நம்பியிருந்த இந்த படம் படு தோல்வி ஆக இருப்பதால் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் கவர்ச்சி ஆட்டம் போட்டாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என அமலா முடிவெடுத்துள்ளாராம்.