பாலிவுட் நடிகை ஆலியா பட், பல காலமாக ரன்பீர் கபூர் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு உள்ளதாக கூறி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரன்பீரும் ஆலியாவும், நடிகை சோனம் கபூரின் திருமண விழாவில் ஒன்றாக காணப்பட்டதை தொடர்ந்து, கிசு கிசுக்கள் வர தொடங்கியுள்ளன.

ரன்பீரும் தனக்கு ஆலியா மீது ஒரு ஈர்ப்பு உள்ளதாக கூறியுள்ளது, பரபரப்பை கிளப்பியது. இவர்கள் இருவரும் இப்பொழுது பிரம்மாஸ்திரா படத்தில் ஒன்றாக வேறு நடிக்க உள்ளதால், இருவருக்கும் இடையே காதல் தீ பரவி உள்ளதாக மும்பை மீடியா செய்தி பரப்பி வருகிறது.

இதனிடையே இவர்களின் நெருக்கத்தை பார்த்து ,நடிகை கேத்ரீனா கைப் படு கோபத்தில் உள்ளதாகவும் செய்திகள் கசிய தொடங்கின. ஏன் என்றால், கேத்ரீனா தான் ரன்பீரின் முன்னாள் காதலி இவர் தான். ரன்பீருடன் சுற்றுவதால், கேத்ரீனாவுக்கும், அவரது தோழியான ஆலியாவுக்கும் பனிப்போர் என்று கூறப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர், தாங்கள் மூவரும் இருக்கும் செலஃபீ ஒன்றை வெளியிட்டு ஆலியாவுக்கும் கேத்ரீனாவுக்கும் சண்டை எதுவும் இல்லை என்று நிரூபித்துள்ளார்.