நடிகை நயன்தாரா, சமீபத்தில் வெளியான அறம் மற்றும் வேலைக்காரன் படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனது தாய்மொழியான மலையாள படவுலகுக்கு செல்ல இருக்கிறார். கடைசியாக அங்கே, மம்முட்டி ஜோடியாக ,புதிய நியமம் படத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஒரு குடும்ப தலைவியாக நடித்திருந்தார். 


Image result for nayantara hot


இப்பொழுது மீண்டும் மலையாளம் திரும்பும் நயன்தாரா, இப்பொழுது நடிக்கவிருப்பது, நடிகர் மற்றும் இயக்குனர் சீனிவாசனின் இளைய மகனான தயான் சீனிவாசன் இயக்குகிற முதல் படமாகும்.


Image result for nayantara hot


 இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது ப்ரேமம் நாயகன் நிவின் பாலி ஆவார். லவ் ஆக்ஷன் டிராமா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நயன்தாரா ஒரு ஆச்சாரமான அய்யர் குடும்பத்து மாமியாக நடிக்க உள்ளாராம். தமிழ் மற்றும் மலையாளம் பேசி அவர் நடிக்க உள்ளதால், இந்த படம் தமிழிலும் டப் செய்யப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. லவ் ஆக்ஷன் டிராமாவின் சாட்டிலைட் உரிமை, படம் எடுக்கப்படும் முன்பே ஏற்கனவே ஒரு பெரும் தொகைக்கு விலை போய்விட்டது குறிப்பிடத்தக்கது 


Find out more: