சென்ற ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக பெரும் புகழ் பெற்றவர் ஷாலினி பாண்டே. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் அர்ஜுன் ரெட்டி படத்திற்காக தெலுங்கு கற்றுக் கொண்டு சொந்த குரலில் பேசி நடித்தது மற்றும் உணர்ச்சிபூர்வமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியது என மிகவும் பாராட்டப்பட்டார்.

அர்ஜுன் ரெட்டி படத்தை தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தாலும் அவர் அடுத்ததாக தேர்வு செய்து நடித்தது மஹாநடி படத்தை. மஹாநடி படத்தில் இவர் நடிகை சாவித்ரியின் சிறு வயது தோழி சுசீலாவாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அடுத்ததாக கல்யாண் ராமின் படத்தில் நடிக்கவிருக்கும் இவர் இப்படத்தில் முதன் முறையாக படு கவர்ச்சி வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

இதற்கு காரணம் இந்த படத்தில் இவரை தவிர நிவேதா தாமஸும் நடிக்க இருப்பது தான். பொத்தியை சமாளிக்கவே கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது போக ஷாலினி பாண்டே தமிழிலும் காதல் மற்றும் கொரில்லா படத்தில் நடித்து வருகிறார்.