சமீபத்தில் வெளிவந்த பலூன் படத்தில் கதாநாயகியாக நடித்த அஞ்சலி, அப்படத்தை தொடர்ந்து அதிரடியாக எடையை குறைத்தார். கொழுக் மொழுக் என்று தனது கவர்ச்சியான வாளிப்பான இடையழகையும் முன்னழகையும் காட்டி நடனமாடி, கலகலப்பு போன்ற படங்களில் ஈர்த்த அஞ்சலியா இது என்ற அளவுக்கு ஆளே மாறிப்போனார்.

ஆனால் எடை குறைத்த பின் தான் பல வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன. முதலில் சசிகுமார் ஜோடியாக நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தமான அஞ்சலி அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்திலும் ஒப்பந்தமானார்.

இப்பொழுது அடுத்ததாக லிசா என்ற பேய் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். பலூன் படமும் ஒரு பேய் படமே என்பது குறிப்பிடத்தக்கது.