நடிகை சாய் பல்லவி மலையாள படமான ப்ரேமம் படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயரான மலர் மிஸ் என்றே அனைவராலும் அறியப்பட்டார். ப்ரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து களி படத்தில் நடித்த சாய் பல்லவி அடுத்ததாக தெலுங்கு திரை உலகுக்குள் நுழைந்தார்.

தெலுங்கில் இவர் அறிமுகமான முதல் படமான பிடா மாபெரும் வெற்றி பெறவே அதற்கு அடுத்து வந்த மிடில் கிளாஸ் அப்பாயி வெற்றி அடைந்தது. தமிழில் இவர் நாயகியாக அறிமுகமான தியா படு தோல்வி அடைந்தாலும் கூட, அதை பற்றி கவலை படாமல் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக சாய் பல்லவி தமிழில் நடித்து வரவிருக்கும் படம் தனுஷ் உடன் நடிக்கும் மாரி ஆகும். பாலாஜி மோகன் இயக்குகிற இப்படத்தில் சாய் பல்லவி ஒரு ஆட்டோ ஓட்டுநராக நடிக்கிறாராம். இதற்காக சாய் பல்லவி சிறப்பு பயிற்சிகள் எடுத்துள்ளதாக கூற படுகிறது.