ஒரு காலத்தில் தனது கவர்ச்சியான இடையழகாலும் பண்பட்ட நடிப்பாலும் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்தவர் இடுப்பழகி சிம்ரன். இவரை தொடர்ந்து த்ரிஷா, நயன்தாரா, அசின் என பலரும் வந்தாலும் கூட, அவர் விட்டு சென்ற இடத்தை நிரப்ப யாருமே இல்லை என்றே உள்ளது.

இப்பொழுதும் கூட கதாநாயகி போலவே அழகும் பொலிவுமாக இருக்கும் சிம்ரன், தற்பொழுது சிவ கார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கி உள்ள சீம ராஜா படத்திலும், விக்ரம் நடிக்க கவுதம் மேனன் எடுத்து வரும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார்.

கதாநாயகியாக இருந்த காலத்தில் அஜீத், விஜய், சூரியா, பிரசாந்த், கமல் ஹாசன் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்த சிம்ரன், அந்த நேரத்தில் நடிக்காமல் மிஸ் ஆனது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மட்டுமே. அவருடன் சந்திரமுகி படத்திலும் நடித்திருக்க வேண்டியது தான், ஆனால், கடைசியில் அவர் வேடத்தில் தான் ஜோதிகா நடித்து புகழ் பெற்றார். இப்பொழுது ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் எடுக்கும் படத்தில் சிம்ரன் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. பார்க்கலாம் சிம்ரனுக்கு இந்த முறையாவது ரஜினிக்கு ஜோடியாகும் அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று.