மலையாள படமான ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அணு எம்மாவுவேல். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அணுவுக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்தன. நாணி ஜோடியாக நடித்த மஜ்னு தட்டு தடுமாறி வெற்றி அடையவே அடுத்ததாக கிளாமர் வேடங்களுக்கு தாவினார்.

தனது தொடையழகை காட்டி, லிப்லாக் காட்சியிலெல்லாம் நடித்த கிட்டு உண்ணாது ஜாக்ரதா படம் கூட ஓரளவுக்கு ஓடியது. ஆனால் இவர் பெரிதும் எதிர்பார்த்த, பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இரண்டு படங்கள் படு தோல்வியை தழுவி விட்டன. அதில் முதலாவது பவார் ஸ்டார் பவன் கல்யாண் ஜோடியாக நடித்த அஃஞ்ஞாதவாசி, அடுத்தது அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த நா பேரு சூர்யா.

இந்த இரண்டு படங்களும் படு தோல்வியை பெற்று மண்ணை கவ்வ, கவர்ச்சியை கூட்டி பாக்கலாம் என்று நினைத்தால், கைவசம் இருந்த ஒரே படமான அமர் அக்பர் ஆந்தோணியும் இலியானா மற்றும் ஸ்ருதி ஹாசன் கைக்கு சென்று விட்டது. இந்நிலையில் இப்பொழுது வேறு பெரிய படங்கள் கைவசம் இல்லாமல் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிக்கா மந்தான்னா இணையும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் அணு இம்மானுவேல்.