நடிகர் ஆர்யா, சென்ற மாதம் வரை கலர்ஸ் டிவியில் நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி கேம் ஷோவில் கலந்து கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் ஆர்யாவை காதலில் விழா செய்து அவரை திருமணம் செய்து கொள்ள பதினைந்து பெண்கள் போட்டியிடுவதாக அமைக்க பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பதினைந்து இளம் பெண்களில் அனைவராலும் விரும்பப்பட்டும், வெறுக்கப்பட்டும் வந்தவர் அபர்ணதி. இவரது குறும்பு சேட்டைகளாலும், ஆர்யாவை உரிமையாக வாடா போடா என்று அழைப்பதும் என, இவர் ஒரு சுட்டி பெண்ணாக அனைவராலும் அறியப்பட்டார்.
ஆர்யா இவரை தான் மணமுடிப்பார் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் கடைசிக்கு முந்தைய நிலையில் இவர் ஆர்யாவால் எலிமிநேட் செய்யப்பட்டார். இதனால் அவர் அழுதபடியே வெளியேறினார். ஆனால் இப்பொழுதோ ஆர்யாவை மணமுடிக்கா விட்டாலும் கூட, ஜி.வி.பிரகாஷ் படத்தில் அவருக்கு ஜோடியாகவுள்ளார். ஆம், ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலனின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக நடிக்க அபர்ணதி புக் செய்யப்பட்டுள்ளார்.