ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக மிகவும் பிரபலமாக இருந்தவர் பேபி ஷாமிலி. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி மற்றும் இயக்குனர் ராம நாராயணன் இயக்கிய பல அம்மன் படங்கள் மற்றும் தெய்வீக கதைகளில் குழந்தை நட்சத்திரமாக பிசியாக நடித்து வந்தவர் ஷாமிலி. 


Image result for shamili


இடையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் , நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் தபுவின் தங்கையாக சிறு வேடத்திலும் நடித்தார். முதல் முறையாக கதாநாயகியாக தெலுங்கில் ஒய் என்ற படத்தில்  சித்தார்த் ஜோடியாக அறிமுகமானார் ஷாமிலி. ஆனால் அப்படம் தோல்வி அடையவே நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார். 


Related image


ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குஞ்சாகோ போபன் ஜோடியாக ஒரு மலையாள படத்திலும் வீர சிவாஜி என்ற விக்ரம் பிரபுவின் படத்திலும் நடித்தார் ஷாமிலி. இவ்விரண்டு படங்களும் கூட படு தோல்வி அடைந்தது. இப்பொழுது கடைசி முயற்சியாக மீண்டும் தெலுங்கில் அம்ம்மாகாரில்லு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் தொடர்ந்து நடிக்கலாமா வேண்டாமா என்று ஷாமிலி யோசித்து வருகிறாராம். 


Find out more: