நடிகை கீர்த்தி சுரேஷ், பாம்பு சட்டை, பைரவா போன்ற படங்களின் தோல்வியால் துவண்டு போயிருந்தார். இதனை தொடர்ந்து இவர் பெரிதும் நம்பியிருந்த பவர் ஸ்டார் பவன் கல்யாணின் அஃஞ்ஞாதவாசி படமும் படு தோல்வியை அடைந்தது.

இதற்கு பின் இவர், நாக் அஸ்வின் இயக்கத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை படம் ஆன மஹாநடியில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான நாளில் இருந்தே அவரை கலாய்த்து ட்ரோல்கள் மற்றும் மீம்ஸ் வந்த வண்ணம் இருந்தன.

ஆனால் படம் வெளியான நாள் முதல் சிறப்பான விமர்சனங்களை பெற்று, கீர்த்தியின் நடிப்பும் பலத்த கைதட்டல்களை பெற்று வருகிறது. ஐம்பது கோடி வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை சமீபத்தில் பார்த்த ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டுகளை தெரிவித்து அவருக்கு பாராட்டு விழா நடத்தி உள்ளார்.