எம். எஸ். தோணி படத்தின் மூலமாக பாலிவுட்டில் புகழ் பெற்றவர் திஷா பட்டாணி. இப்படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகர் டைகர் ஷராப் உடன் காதல் வயப்பட்டார். இடையில் லோபர் என்ற தெலுங்கு படத்திலும் கூட நடித்த திஷா அடுத்ததாக காதலர் டைகர் ஷராப் உடன் நடித்த பாகி 2, கான் நடிகர்களின் படங்களுக்கு நிகராக வசூல் சாதனை செய்தது.

இதனால் திஷா அனைவர்க்கும் பிடித்த நடிகை ஆனார். இதனை தொடர்ந்து சல்மான் கான் ஜோடியாக பரத் படத்திலும் ஹ்ரித்திக் ரோஷனின் அடுத்த படத்திலும் நடிக்க கமிட் ஆனார்.

இந்நிலையில் கடந்த சில காலமாகவே தனது இடையழகை காட்டும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் அடிக்கடி வெளியிட்டு வந்த திஷா சமீப காலமாக வேறு ஒரு பாணியில் இறங்கி அடித்து வருகிறார். அது என்னவென்றால், தனது ஹாட்டான டூ பீஸ் பிகினி போட்டோக்களாக வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி, அதன் மூலமாகவும் பட வாய்ப்புகளை பெறுவதுதான். சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா படம் மூலமாக தமிழில் அறிமுகமாக இருக்கும் திஷா, தமிழிலும் பிகினி அளவுக்கு கவர்ச்சியாக நடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது.