கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் பாருல் யாதவ். முன்னொரு காலத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக அவரது தந்தை கஸ்தூரி ராஜ இயக்கிய ட்ரீம்ஸ் படத்தில் நடித்தவர் தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுதோ கன்னடத்தில் கில்லிங் வீரப்பன் போன்ற படங்களில் தனது நடிப்பாலும் பல படங்களில் தனது அசாத்திய கவர்ச்சியால் அதிர வைத்து கொண்டிருக்கிறார் பாருல்.
சமீபத்தில் இவர் ஓலா கேபிள் பயணம் செய்த அனுபவம் மிகவும் வைரலாகி வருகிறது. பாருல் சமீபத்தில் ஓலா கேப்பில் பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இடையிலே அவர் இறங்கி திரும்ப வந்து கேப்புக்குள் பார்த்த போது, அவர் வைத்திருந்த விலை கூடிய பரிசு பொருட்கள் மற்றும் வாட்சுகள் நிறைந்த பேக் காணாமல் போகவே அவர் வண்டி ஓட்டிய ட்ரைவரை கேட்டுள்ளார்.
ட்ரைவரோ மிகவும் அலட்சியமாக தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாருல், கோபமாக சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, போலீசார் விசாரித்ததில் ட்ரைவர் திருட்டை ஒப்புக்கொண்டு திருடிய பொருட்களை திருப்பி கொடுத்துள்ளான். இதனை தொடர்ந்து பாருல் யாதவ் யாரும் ஓலாவை நம்பாதீர்கள் என்று மக்களுக்கு கூறி வருகிறார்.