இந்த ஆண்டு வெளியான தெலுங்கு படங்களில் முக்கியமான ஒரு வெற்றி படம் ஆவ். நாணி தயாரிப்பில் பிரஷாந்த் வர்மா இயக்கி வெளிவந்த இப்படத்தில் காஜல் அகர்வால் மலிடிப்பில் பெர்சனாலிட்டி டிஸார்டர் உள்ள காளி என்ற பெண்ணாக நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் அடுத்ததாக நானியை இயக்குவார் என எதிர்பார்க்க பட்டது. ஆனால் அவர் இயக்க இருப்பதோ தமன்னாவை. தமன்னா நடிக்கும் குயின் ஒன்ஸ் அகைன் படத்தை முதலில் நீலகண்ட இயக்குவதாக இருந்தது.

ஆனால் அவர் விலகவே இப்பொழுது பிரசாந்த் வர்மா தமன்னாவை இயக்கவுள்ளார். நேற்று தமன்னா மற்றும் குயின் ஒன்ஸ் அகைன் பட குழுவினருடன் இனைந்து பிரஷாந்த் தன பிறந்தநாளை கொண்டாடி படப்பிடிப்பை துவக்கினார்.