நடிகை ஹுமா குரேஷி, பாலிவுட்டில் தனது நடிப்பால் அனைவராலும் பாராட்ட பட்டு வருபவர். அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஒப் வாசேபூர், பத்லாபூர் மற்றும் ஜாலி எல்.எல்.பி 2 உட்பட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பெயர் பெற்றவர் ஹுமா.

இவர் முதலில் தமிழில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே தல அஜீத் ஜோடியாக பில்லா இரண்டாம் பாகத்தில் நடித்திருக்க வேண்டியது. ஆனால் அவ்வாய்ப்பு அமையாமல் போகவே சில வருடங்கள் கழித்து ஹுமா தென்னக திரை உலகில் மலையாளம் மூலமாக நுழைந்தார். மம்மூட்டி ஜோடியாக நடித்த வைட் என்ற அந்த படமும் படு தோல்வியை தழுவியது.

தற்பொழுது மீண்டும் தமிழ் திரையுலக வாய்ப்பு இவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக பா. ரஞ்சித்தின் காலா மூலமாக கிடைத்தது. இந்த படத்தில் அவர் ரஜினியின் நாற்பத்தி ஐந்து வயது காதலி சரினாவாக நடித்துள்ளார். இப்படம் ஒரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில், ஹுமாவுக்கு அடுத்ததாக தெலுங்கில் அறிமுகமாகும் வாய்ப்பு அமைந்து உள்ளது. நடிகர் வெங்கடேஷ் மற்றும் நாக சைதன்யா நடிக்கும் மல்டி ஸ்டாரர் படத்தில், ஹுமா வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.