கவர்ச்சி நாயகி கேத்தரின் தெரசா, மெட்றாஸ் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாராட்ட பட்டார். ஆனால் அப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் தெலுங்கிற்கு சென்ற கேத்தரின் ,அங்கே இதரமயில்தோ, நேனே ராஜு நேனே மந்திரி, போன்ற படங்களில் நடித்தார்.
இது மட்டுமின்றி படு கவர்ச்சியாக, நீச்சல் உடை காட்சிகள் மற்றும் குளியல் காட்சிகளில் நடித்த கவுதம் நந்தா படம் கூட படு தோல்வியை தழுவி இவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் தான் இவர் இந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 2 படத்தில் காமெடி கலந்த பாத்திரத்தில் சிறிய அளவில் கவர்ச்சியும் காட்டி நடித்தார் கேத்தரின்.
ஆனால் இப்படம் வெற்றி பெற்றும் கூட கேத்தரீனுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் நொந்து போன கேத்தரின், கடைசி அஸ்திரமாக அதிரடி கவர்ச்சி காட்டலாம் என்று முடிவு செய்துள்ளாராம். டூ பீஸ் பிகினி அணிந்து நடிக்க கூட ரெடி என்று கூறி, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தனது மேனேஜர்கள் மூலமாக கவர்ச்சி போட்டோஷூட் ஆல்பங்களை கொடுத்து அனுப்பி வாய்ப்பு தேடி வருகிறாராம் கேத்தரின் தெரசா.