மஹாநடி படத்தின் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகை ஆகி விட்டார். இவரது வீட்டை தேடி வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை படமாகிய மஹாநடி படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.
![Image result for keerthy suresh apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies_latestnews/tdehainviaeakeaspoi-647x450.jpg)
இப்படத்தில் சாவித்ரியாக நடிக்காமல் வாழ்ந்ததாக அனைவராலும் கீர்த்தி சுரேஷ் பாராட்டப்பட்டார். ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடுவே அழைத்து கௌரவிக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் கீர்த்தி. இந்நிலையில் இவருக்கு பல கவர்ச்சி வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கதவை தட்டுகிறதாம். ஆனால் கீர்த்தி அது போன்ற கவர்ச்சி ஆட்டங்களையோ ,கிளாமர் கேரக்டர்களையோ விரும்பாமல் தள்ளியே இருக்கிறார்.
![Image result for keerthy suresh apherald](http://bcdn.newshunt.com/cmd/resize/400x400_60/fetchdata13/images/8c/46/e3/8c46e32a0d33926ef763bac96e997aa2.jpg)
இது பற்றி அவர் கூறுகையில் "எனது அம்மா மற்றும் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான படங்கள் மட்டுமே நான் நடிப்பேன் கவர்ச்சியே வேண்டாம்" என்று கூறியுள்ளார். இதனால் வாய்ப்புகள் வருவது மெதுவாக வந்தால் கூட பொறுமையாக படங்கள் பண்ணினால் போதும்," எத்தனை படங்கள் பண்ணுகிறேன் என்பது முக்கியம் அல்ல எப்படிப்பட்ட படம் பண்ணுகிறேன் என்பது தான் முக்கியம்" ஏன்று கீர்த்தி கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் இப்பொழுது விக்ரமுடன் சாமி ஸ்கொயர் ,விஷாலுடன் சண்டகோழி இரண்டாம் பாகம் ஆகிய பெரிய படங்களில் நடித்து வருகிறார்.