நடிகை மஞ்சிமா மோகன் மலையாளத்தில் ஒரு வடக்கன் செலஃபீ என்ற வெற்றி படத்தின் மூலம் புகழ் பெற்றார். அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தமிழிலும் தெலுங்கிலும் இயக்கிய படமான அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும், சாகசம் ஸ்வாஸகா சாகிப்போ படத்தில் நாக சைதன்யா ஜோடியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டார்.
![Image result for manjima mohan apherald](http://bcdn.newshunt.com/cmd/resize/400x400_60/fetchdata12/images/88/fd/3a/88fd3a4c0b0c3be08b2dd2e49ce06652.jpg)
இந்த படங்களின் இசை பெரும் வெற்றி பெற்றாலும் கூட படங்கள் ஆவரேஜாகவே ஓடின. இப்படத்தை தொடர்ந்து மஞ்சிமா விக்ரம் பிரபு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்தார். சுந்தர பாண்டியன் படத்தை இயக்கிய பிரபாகரன் இயக்கத்தில் வெளியான இப்படமும் படு தோல்வியை அடைந்தது. கடைசியாக உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக இப்படி வெல்லும் படத்தில் நடித்தார். இதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் இவரே எதிர்பாராத வண்ணம் முத்தையாவின் அடுத்த படமான தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மஞ்சிமா மோகன். கொம்பன், குட்டி புலி, மருது போன்ற கிராமிய படங்களுக்கு பெயர் போன முத்தையாவும், ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என அடல்ட் படங்களில் நடித்தும், முத்துராமலிங்கம் படத்தில் நடித்து படு மோசமாக கலாய் வாங்கிய கவுதம் கார்த்திக்கும் இணையும் இந்த படத்தில் போய் மஞ்சிமா ஏன் நடிக்கிறார் என்று அனைவரும் கேட்டு வருகின்றனர்.