நடிகர் ரன்பீர் கபூர் தற்பொழுது தான் நடித்து ராஜ்குமார் கிராணி இயக்கி வெளியாகவுள்ள சஞ்சு படத்தை ப்ரமோட் செய்வதில் பிசியாக உள்ளார். இந்த படம் முன்னாள் ஹீரோ சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு ஆகும். இந்நிலையில் அடுத்ததாக ரன்பீர் அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஆலியா பட்டுடன் இனைந்து பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இதனிடையே சமீப காலமாக ரன்பீரும் ஆலியாவும் ஒன்றாக சுற்றுவதாகவும் அவர்கள் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் செய்திகள் பரவின. ரன்பீரும் சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்த உறவு புதிதாக உள்ளது, இப்போதைக்கு ஏதும் கூற முடியாது என்று கூறி அவர்கள் டேட்டிங் செய்வதை ஒத்துக்கொண்டார்.

இதற்கு முன்னர் ரன்பீர் கத்ரினா கைப்பிற்கு காதலித்தார். அவர்கள் இருவரும் நடித்த சில படங்களுக்கு பிறகு, குறிப்பாக, ஜக்கா ஜஸூஸ் படத்துக்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். கத்ரினாவுக்கு முன்னர் மனிதர் தீபிகா படுகோணை காதலித்தார் அவரையும் அவர்கள் இருவரும் நடித்த பச்ன ஏ ஹசீனா படத்துக்கு பின்னர் கழட்டி விட்டார். இந்நிலையில் பிரம்மஸ்திரா படத்துக்கு பிறகு ஆலியா கதையும் ஊ ஊ தான் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.